Sunday 21 September, 2008

எனது நண்பன்

இதை எழுதுவதற்கு என் நண்பன் ஒருவனே காரணம். அவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான்.

எனது பழைய கல்லூரி நண்பர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து, கிராமப்புற மாணவர்களுக்கு உதவுதற்குக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று முடிவு செய்தனர். அந்த அமைப்பில் யார் யார் பங்கு பெறலாம், அமைப்புக்கு என்ன பெயரிடலாம் என்ற விவாதத்தில் அவன் கூறிய கருத்துக்கள், மெத்த படித்த மத்தியதர வர்க்க மற்றும் கணிணி துறையில் பணிபுரிவோரின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக எனக்கு தோன்றுகிறது.

அவன் சொல்றான், “டேய் அரசியல்ல இருக்கிறவன இதுல சேக்காதிங்க, பேர்ல புரட்சி, கிரட்சின்லாம் வக்கியதிங்க”ன்னு. நான் குறுக்கிட்டதற்கு, “Boss கம்யூனிசமெல்லாம் வெளிநாட்டு சரக்கு, இங்கலாம் வேலைக்கு ஆகாது. அந்த கொள்கைகல்லாம் உடல் உழைப்பு இருந்த காலத்துல எழுதுனது, இன்னைக்கு எல்லாமே automatic ஆயிருச்சு, computer வந்துருச்சு, இதெல்லாம் பொருந்தாது” ங்றான்!!

இவர்களை பொருத்தவரை, தேர்தல் ஒன்று மட்டுமே அரசியல் என்று நினைக்கிறார்கள். அதற்கு அப்பால் ஒவ்வொரு செயலுக்குப்பின் மறைந்திருக்கும் வர்ணாசிரம, வர்க்க அரசியலை பார்ப்பதில்லை. இதை முதலாளித்துவ அரசியல் கட்சிகள் மிக கவனத்துடன் பாதுகாத்து வருகின்றன.

அரசியல் = அரசு + இயல்.
அதாவது அரசு இயங்கும் முறை.

அரசியல்வாதி = அரசு + இயல் + வாதி.
அதாவது அரசு இயங்கும் முறையை பற்றி வாதிடுபவன்.

மண்ணெண்னை விலை ஏறிப்போச்சுணு பொலம்புற இட்லி சுடற கிழவியும் அரசியல்வாதிதான். ஏன்னா அரசு இயங்ற முறை பற்றி விமர்சனம் பண்ணுதே!. அப்ப நீயும் நானும் அரசியல்வாதிதான். ஆனா இதை பத்தி சிந்திக்காம, அரசியில் பேசுறதற்கேனு ஒரு தனி கூட்டத்தை ஒதுக்கனது தான் பெறும் தவறு.


பெருவாரியான மக்கள் தங்களை அரசியல் சார்பற்ற நடுநிலையாலர்கள் என்று அறிவித்து கொண்டாலும், சமயம் வரும்போது தனது சாதி மற்றும் மத அரசியலலில் மறைமுகமாக ஈடுபடுகிறார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும், அதென்ன “அடிக்கிறவன் பக்கமும் நிற்க மாட்டேன், அடி வாங்கிறவன் பக்கமும் நிக்க மாட்டேன்” என்பது நடுநிலையா? அல்லது அடிக்கிறவனுக்கு மறைமுக ஆதரவா?


புரட்சிக்குறித்த அவனோட கருத்துல நானும் உடன்படுகிறேன். அம்பானியோட ரிலையன்ஸ் தொலைத்தொடர்ப்பு புரட்சியையும், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்தையும் பார்த்து புரட்சிக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட, இந்த IT புரட்சியாளர்களிடம் வேற என்ன பேச முடியும்?

கம்யூனிசம் மார்க்ஸ்க்கு உதித்த ஞானோதயம் அல்ல. மார்க்ஸின் கடுமையான ஆராய்ச்சிக்குப் பின் உருவான சமூக விஞ்ஞானம். நியூட்டன், எய்ன்ஸ்டின், டார்வின், கலிலியோ போன்றோர் அறிவியலில் ஆராய்ச்சி செய்தது போல மார்க்ஸ் சமூக அறிவியலில் ஆராய்ச்சி செய்தார்.

இறக்குமதி சரக்கான நியூட்டன் விதிகளை பயன்படுத்தி இந்திய மண்ணில் ராக்கெட் விட முடியுமென்றால், எய்ன்ஸ்டின் விதிகளை பயன்ப்படுத்தி இந்திய மண்ணை, அணு குண்டு சோதனையால் கிழிக்க முடியுமென்றால், இந்திய மண்ணில் நிலவும் சமூக ஏற்ற தாழ்வை கம்யூனிசம் தகர்த்தே தீரும்.


இந்த மத்தியத்தர வர்க்கம், என்றும் தான் மட்டுமே உலகம் என்று நினைக்கும். அவனுக்கு பிரச்சனை என்றால் எல்லோரும் போராட வேண்டும். இவன் ஏ.சி ரூம்ல இருந்து “எல்லோரும் உடல் உழைப்பை கைவிட்டுட்டாங்க”றான். இன்னைக்கு அவனுக்கு சோறு போடற விவாசயத்திலதான் 70% மக்கள் இருக்கிறார்கள். இவந்தான் Pizza சாப்பிடறாவானச்சே மறந்துட்டேன். இவன் சொந்தகாரன் இன்னும் வயல் உழுதுக்கிட்டுதான் இருக்கான். ம்ம்ம்ம்ம்.......

முதல்ல இவன நம்ம கலப்பையால உழுகனும் ஏன்னா இவன் இன்னும் பண்படாத மண்.

4 comments:

Unknown said...

உண்மை நிலை

உண்மை தான் நண்பா. கம்யூனிசம் என்பது விஞ்ஞானம் . ஆனால் எல்லா விஞ்ஞானமும் சில நிபந்தனைக்கு உட்பட்டது . ஆதோ போல் கம்யூனிசம் பல நிபந்தனைகளுக்கு (மக்கள் எண்ணம், அரசு, அரசியல்வாதி) உட்பட்டது.
கம்யூனிசம் ஆட்சி வந்தால் மக்கள் தாமே முன் வந்து தாம் கடமை செய்வார் என்ற உன் எண்ணம் தவறு. ஆனால் இங்கே வேலை செய்யாமல் வருமானம் என்பது மக்களின் எண்ணம் . மக்கள் தங்கள் கடமை மறத்து சோம்பறி மாறீவிட்டார். இங்கு அரசின் அடிபடை விதிகள் கூட மக்களால் மதிக்கபடுவதில்லை (காந்தி பிறந்த நாள் மாமிசம், சாராயம் தடை இல்லை)
மாதவாதம் போல் கம்யூனிசமும் ஒரு வாதம். மக்களின் செயல், எண்ணங்களை முடக்கும் வாதம். மக்களை கட்டுபடுத்தாத, வரைமுறை இல்லாத ஏந்த ஒரு அரசும் வெற்றி பெறாது என்பது எனது எண்ணம்.

உண்மை தான் இன்னைக்கு நமக்கு சோறு போடற விவாசயத்திலதான் 70% மக்கள் இருக்கிறார்கள். ஒரு தனி மனித செல்லை சாடும் நீங்கள், இங்கே ஒர் அரசு விவாசாய நிலத்தை பறித்து தனி மனிதனிடம் கொடுத்தது உன் கோபம் எங்கே ? தமிழகத்தில் SEZ அமைக்க எதிர்க்கும் நீங்கள், இங்கே ஆதரிக்கும் கொள்கை எனக்கு புரியவில்லை.
உலகமய்யாக்கல், தனியாமாக்கல் ஏதிரான உங்களின் கொள்கை எங்கே ?

Anonymous said...

நல்ல பதிவு..வாழ்த்துக்கள்
....
ஓம் ...என்ற மலக்கட்டை
கழிய வைத்தால்
உடலில் உள்ள வாதைஎல்லாம்
ஓடிபோச்சு
தாம் ...என்ற சிறுநீரை
தெளிய வைத்தால்
சடத்திலுள்ள ரோகமெல்லாம் தணிந்து போச்சு
கூம் ...என்ற உமிழ் நீரை
முறிய வைத்தால் கூட்டிலுள்ள பகைஎல்லாம் குலைந்து போச்சு
கோ ....வென்ற இவை மூன்றும்
களங்கம் அற்றால்
கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே ...!
-ஈஸ்வரன் மெய் ஞான நாடி ....பாடல்

ரவி said...

அரசியல்வாதி கிழவி உதாரணம் சூப்பர்...

நிறைய எழுதுங்க !!!!!

வேர்ட் வெரிபிக்கேஷன் ரிமூவ் பண்ணிடுங்க தலைவா

ஜெயக்குமார் said...

செந்தழல் ரவி அவர்களே! உங்கள் வாழ்த்துக்கள் எமக்கு புதிய எழுச்சியை தருகிறது. நன்றி.
வேர்ட் வெரிபிக்கேஷன் செயலிழக்க செய்யப்பட்டது.

Post a Comment